my day to day experiences

Wednesday, January 7, 2015

Whatsapp shares

கோபம்

2

மௌனம்

3

உண்மை

4

நம்பிக்கை 

5

நல்லவனா?

6

புத்திசாலி

7

அடக்கம்

9



பாதை

1

Tuesday, December 30, 2014

MSD RETIRES FROM TEST FORMAT


So, finally a shocking day to the Indian cricket fans with an unexpected decision from our India cricket skipper Mahendra Singh Dhoni. His announcement of retirement from test format has come, soon after the result of the third test at Melbourne. This had initiated many debates among the fans and the experts whether its right time or whether its right decision. Whatever may be, the brave captain retired in test format with a brave heart. With a Test career of 90 matches, scores run of 4876 at an average of 39.09. He captained the side for 60 Tests out of which India won 27 matches and lost 18 matches with a winning percentage of 45 which is the highest for any Indian skipper.


AS CAPTAIN:


Though he has a highest winning profile compared to any other Indian captain he has been criticised for the continuous defeats of Indian team overseas. He made his first Test as captain in 2008 when Anil Kumble was injured and continued to take over the captaincy after the retirement of Anil Kumble. The first part of his captaincy was victorious which lead India to the top spot in the year 2009. We also accept he was in the shades of the senior batsmen who were with loads of experience. But after 2011-2012 with the retirement of senior players the stability of Indian cricket in test format started to stumble. With less experience of younger players in the team, defeats started to pile upon with many numbers of overseas series. MS Dhoni with a brave heart started to take responsibilities of the defeats. When India was defeated badly in Tests in England he was criticised for his captaincy but he valiantly said “I can’t quit captaincy. That will be running away from the responsibility. It’s my job to give Team India the lost glory again”. When teams Test performance started to dip his batting career was also not in a rise though he managed with few 50’s at a difficult situation.


DHONI OVERSEAS


Many criticise Dhoni for his defeat in overseas Test’s by comparing with Ganguly’s overseas career. Following are the overseas records of the Indian captains:




  • Ganguly: 11 (Zimbabwe – 3, Bangladesh – 3, England, Australia, Sri Lanka, Pakistan, West Indies)

  • Dhoni: 6 (England, New Zealand, Bangladesh, Sri Lanka, South Africa, West Indies)

  • Dravid: 5 (Bangladesh, Pakistan, South Africa, West Indies, England)

  • Bedi: 3 (Australia – 2, West Indies)

  • MAK Pataudi: 3 (New Zealand – 3)

  • Gavaskar: 2 (New Zealand, Australia)

  • Kapil Dev: 2 (England – 2)

  • Kumble: 2 (Australia, Sri Lanka)

  • Wadekar: 2 (West Indies, England)

  • Azharuddin: 1 (Sri Lanka)

  • Sehwag: 1 (Bangladesh)


MSD VS DADA


Out of 11 wins under Ganguly’s captaincy 3 are against Zimbabwe 3 against Bangladesh 1 each against Cricket Australia, West Indies and Cricket South Africa. 5 are on subcontinent pitches. Am not degrading Ganguly it is not right  in comparing their Test captaincy tenure as Ganguly had a team of in form Sachin, Anil Kumble, Laxman, Dravid etc in his squad which Dhoni not had for past 2 to 3 years. Ganguly is the one who showed us the winning formula overseas we should definitely accept that, but not by degrading other.


BOWLING CONCERN


The Bowling department of Indian cricket is not up to the mark right from the start and it became worse since 2011 which made Dhoni suffer lot as captain. Many young bowlers are just blooming in the test format in which they were not able to perform consistently.  Dhoni also holds many records as wicket keeper batsman completing his 250th catch in Australian series.


CONTROVERSIES


There always rumours around that Dhoni is the reason for retirement of many senior players but none of them came out with a hit instead they praised him for  his role. You may be a fan of anyone but whenever someone comes to lead or take responsibilities its necessary to back them which is surely missing among Indians.


There are also meme by fans which say he doesn’t wait for milestones such as 100 Tests blah blah which indirectly hitting Sachin’s farewell. It is not good in speaking about the past and also according to me that farewell was rightful to Sachin for the work he done to Indian cricket. I also wish there will be a decent farewell for Dhoni at Sydney though he will not be playing.


RIGHT DECISION?


It has been rumoured that he might announce his retirement after this current series but with a decent performance of  V Kohli as a captain in the first test against Australia MSD would have decided before the series ends. According to me it is not a bad decision, how much can a player pile up defeats with no sources and also with a dip in his personal performance in Tests. After the announcement from BCCI many fans registered in social networking sites as, it is a right decision by Dhoni because they don’t want their hero to be doomed more without any reasons.


RIGHT TIME?


It is debated whether its a right time to announce his retirement according to me it is not with only one match remaining in the current series and with only 46 days for world cup it has given a good opportunity for big mouths to medias which will affect the team mentally.


Finally, the selfie which took by S Raina after the Test retirement announcement with MSD concludes brilliantly with his tearful eyes speaking millions of words.


#THANK YOU DHONI  #CONGRATS KOHLI




[caption id="attachment_238" align="aligncenter" width="225"]Selfie of Raina with MSD after Announcement Selfie of Raina with MSD after Announcement[/caption]

10849087_1583751521862510_5905070300217985993_o

 

Wednesday, November 12, 2014

Kushi is Biryani - My Biryani Story

Kushi is Biryani - My Biryani Story




What does this food have in it?how many fans for it.. no other food has got such a fan following as this… yes, I am talking about THE BIRYANI. Having its origin from the Mughal cuisine this food has build its own empire today. Right from Lucknow Biryani, Bombay biryani, Thalassery biryani, Hyderabadi biryani, Calcutta biryani, Bhatkali biryani, Memoni biryani, Palakkad Rawther biryani, Sindhi biryani, Karachi beef biryani, Kalyani biryani, Bohri biryani and our region famed Dindigul biryani, Vaniyambadi biryani has huge number of ardent fans. Though its tastes differently from region to region the pride it earned is same.I have tasted many times this mouthwatering food, but the first experience of tasting this scrumptious food (other than home) is still fresh in my mind.


THE BIRYANI HUNTING



“I have a long time desire to eat biryani after my mother stopped cooking it at home I was like pestering my mom for my favourite food but she refused to do (grrrrr…) and as a bonus to my pestering activity a newly opened biryani shop has announced an offer as buy one get one free for a week near my locality. Ahhh!!! It's my time (my mind voice). I strongly recommended the offer to fulfill my long time desire. It was a rainy night in the month of November and yes finally got a nod from my mother at 8.30 p.m. The shop is situated at M.K.B Nagar which was about 5 km from my home. Me and my dad started the journey in bi-cycle by 9.00 p.m with me having a mindset of reaching my long time objective. YES, THE BIRYANI HUNTING STARTS.


It was raining cats and dogs though we reached the destination. But as the saying goes on “Many a slip between the cup and the lip” it was there for me. Yes, the shop was closed, as it was raining no one was there to enquire so next what? Upma at home? (noooooo…..). My father searched for other biryani shops but in vain. So, we started our return trip in another route with a possibility of finding another shop I nearly lost all my hopes of eating my favorite food. I was insisting my dad to return to home, but he was reluctant I felt very pity for him as he is riding the bi-cycle with me in this heavy rain with fully dumped in the water. After a 6 km of ride I was with negative hopes as the time was already 10.30 p.m and strongly insisted my dad to return as the last cutting for my home is nearing. But as I was saying my dad “Polam daddy veetuku” (we’ll go to home) I could see  5 to 7 men standing under the green tube light as we approached further I started reading “BISMILLAH HYDERABADI BIRYANI (HALLAL)” OMG… its there, my hunting objective. We went into the hotel and ordered for 3 half biryani as I was shivering due to the effect of rain I stood near the biryani vessel which was giving a warm feeling with its heat. The smell and the ding ding sound of the biryani vessel… wahhh awesomatic!!! (slangy) my mouth rained equaled to the outside condition, but I secretly swallowed my saliva in order to avoid my embarrassing situation with others. We got the parcels and I was holding the bag full of biryani as if  I have achieved something great. Finally, the clock was ticking 11 we reached our home. I quickly changed my dress and sat on the floor with the opened parcel. Yes, my tasty, appetizing, scrumptious, yummy, luscious, delectable, mouthwatering BIRYANI is in front of me. Enjoyed every bit and finished it as a hungry lion.


Though I have eaten it hundreds of time after this the first-time experience still stays fresh in my mind. And each time I eat my favorite food the memories trickle me to the rainy night. The lust for Biryani never ends in me.



Many say Biryani is a Food but for me Biryani is an Emotion


 

sri

Monday, November 3, 2014

Is Indian Cars Safe?


So, finally Global NCAP has slapped at the Indian Car market with a shocking test results that none of the base variants cars selling in India has passed the frontal collision test or in other words they are not safe. With the number of road accidents go on increasing year by year in our country these recent reports turns to be an eye opener for both the government and the automobile manufacturers.


According to the reports the first round of test which took place in the month of January took base variant cars of Tata Nano, Hyundai i10, Maruti Alto 800, Ford Figo and Volkswagen Polo. In this test, frontal collision was tested and the safety of the car is rated on a scale of 5 stars. Before conducting the test, these cars were declared as fail as the base variants don’t have the airbags and ABS which are the eligible criteria for the tests. Though these were not present the test was made to judge the structural stability of the vehicle after the collision. The structural stability was also not up to the expectations which resulted in complete collapse of the car. So, all the cars were given zero stars and rated as unsafe for passengers. To the depth of the test the collision of the car was made at two speeds 56 km/hr and 64 km/hr. Practically speaking the minimum speed at which we drive in NH roads is at 90km/hr and more. So, now think of the severity of the accidents.


In the month of March second tests was conducted with two variants of Swift that is the base variant (Lxi) and Higher variant (Zxi) both are sold in the Indian market while only the later was exported to the Latin American region which comprises of both airbags and ABS while the base variant doesn’t equipped with it and also with Nissan Datsun. We all know Swift is one of the fast selling and largest selling car model in India with a high sale of reaching 10 million units. So will all these say that swift is safer? No... Absolutely not... the base variant which only sold in India failed the test with zero star and rated unsafe and the another one which were exported passed the test with three star as it is equipped with air bags and ABS.


So the air bags and ABS forms the basic safety feature for a car on the roads which were denied or can be optional for the Indian customers. The main reason for the absence of airbags and ABS is that there are no certain regulations for safety features of the car or in other words it is not been revived with development of technology in India. And also the car manufacturers in order to increase the sale, focuses only on the price of the vehicle and not the safety features which might increases the total price of the car. If the airbags and ABS are made mandatory as brakes, steering and indicators the manufacturers will surely impose it. After these tests the Government of India reported that new Motor Vehicle act is being revived and soon be under practices and also a testing platform for judging the car’s safety and features will be established within a couple of months in Chennai.


So, the Indian Government must ensure that the airbag and ABS must be mandatory in the cars sold in our country. In order to assure a safe driving on Indian roads three things must be there: driver’s discipline, well built rules and roads, safer vehicles. If these three are followed strictly we can surely reduce the accidents by a huge margin.


                                                                                                                sri


video of the first test


video of the second test



The info collected from various sources

Tuesday, September 2, 2014

குட் மார்னிங் வரிகள்

வியர்வைத் துளி



இலக்கை அடையாமல் தோல்வி அடையும்போது வரும் வியர்வைத் துளிகளும் நீராகும் என் வெற்றி என்னும் செடிகளுக்கு






மரியாதை



மாலைப் போட்டு தாடி வைத்தால் சந்நியாசி
காசில்லாமல் தாடி வைத்தால் பரதேசி
மரியாதை மனிதர்க்கா மாலைக்கா...?






விடிந்தது



விடிந்தால் வினைத்தீரும் என்று
விண்ணைநோக்கி கண்ணயர்ந்தேன்
விடிந்ததுக் காலை
தீர்ந்தது இரவு.......






கோபிகை



காரிருள் காலையைக் கலைத்தக் காரிகை
வளைவு நெளிவுகள் உள்ள ஆபகை
கூந்தலோ வாரிமுடிந்த வாசிகை
சின்னத் தூரிகையால் வரைந்த தாரிகை
இந்தக் கண்ணனுக்கேத்த கோபிகை






இழுக்கு



வாழ்க்கைக்கு வேண்டுவதை, வேண்டுவதை விடுத்து வேண்டாததை வேண்டுதலும்
வேண்டியவர் வேண்டாதவர் ஆகியப்பின் வேண்டாதவருக்கு வேண்டாதது வேண்டும் என்று வேண்டுவோரும்
வேண்டாதது வேண்டியப்பின் நடக்கவில்லை என்றால் வேண்டியவனிடமே வேதனையை காட்டுபவனும் இவ்வுலகுக்கு இழுக்கு.






வயக்கம்



தயக்கத்துடன் எட்டி பார்க்கும் சூரியன்
மயக்கத்துடன் கட்டிலில் நான்
கயக்கத்தொடு வாழ்வு என்றாலும்
இயக்கமின்றி இல்லை நான்
வயக்கம் வரும் ஒரு நாள் என்ற எதிர்பார்ப்பில்

Friday, August 1, 2014

கிறுக்கல்ஸ் – பாகம் 4

வம்பு 



எப்பொழுதுமே கடவுளையே வம்பிழுக்கிறாய் அவ்ளோ தயிரியமா??????


ஆம் அவர் தான் பதிலுக்கு ஏதும் பேசமாட்டார் என்ற தயிரியம்







பள்ளி கூடம்



படித்த அடிமைகளை உருவாக்கும்


கட்டுப்பாடான தொழிற்சாலை







அழகு



காலை மாலை பள்ளி சென்று கூட்டி வந்தாளும்


பள்ளியின் அனைத்து தாள்களிலும்


தகப்பன் என்ற இடத்தில் கையொப்பம் இட்டாலும்


பிள்ளை எத்தனையாவது படிக்குதுன்னு கேக்கும்பொழுது


தெரியாமல் விழிக்கும் ஒவ்வொரு


தகப்பனின் இன்னொசென்ஸ்சும் (innocence) அழகு தான்







எரித்துவிடு



சில மனிதர்களின் வார்த்தைகளை எதிர்த்து நிற்பதை விட


எரித்து விட்டு செல்வது எவ்வளவோ மேல்







கோலம்



உன் வீட்டு கோலமாக இருக்க விரும்புகிறேன்


அப்பொழுது தான் நீ இழுத்த இழுப்புக்கெல்லாம் வந்து


உன்னை சந்தோசபடுத்த முடியும்


 

                                                                                                                                                                                      ஸ்ரீ

Tuesday, July 8, 2014

கிறுக்கல்ஸ் – பாகம் 3

கால் கட்டுன்னா செத்தப்பின் பிணத்தோட காலக் கட்டுவாங்களே அதானே ?

சீக்கிரம் கல்யாணம் செய்து வைக்கறதுக்கும் கால் கட்டு தான் சொல்வாங்க

அந்த காலத்தலையே டபுள் மீனிங்லப்  பேச ஆரமித்துவிட்டான் தமிழன்


 சமாளிப்(பூ) 

காதல் பரிசாக “காகிதப் பூவை” ஏன் கொடுத்தேன் தெரியுமா???

நம் காதல் நினைவுகள் மட்டுமின்றி “பரிசுகளும்” வாடிவிட கூடாதென்பதற்காக

 


சிற்பி 

காலில் மிதிப்பட்ட கல்லும் கடவுள் ஆகலாம்

அதை சரியானச் சிற்பி செதுக்கினால்


புனிதம்

பசிக்காக திருடாமல், புசிப்பதால் - என் பார்வையில்

ஒரு வேசியும் புனிதமடைகிறாள்


பிசாசு

அன்று கல்வி கற்க தடையாய் இருந்தது சாதிப் பிசாசு

இன்று கல்வி கற்க தடையாய் இருப்பது பணப் பிசாசு

அன்று முதல் இன்று வரை பிசாசு வகைகள் தான் மாறுகிறது

பிசாசு அப்படியே தான் இருக்கிறது

 

 

ஸ்ரீ

Sunday, March 30, 2014

Pulsar பாவி


அவளோடு ஆவலாய் தேசிய நெடுஞ்சாலையில் பயணம்


50 கிலோமீட்டர் வேகத்தில் splendor + ல் நான் முன்னே அவள் பின்னே


என் வேகத்துக்கு வேட்டு என் காதலுக்கு பூட்டு


90 கிலோமீட்டர் வேகத்தில் ஒரு pulsar எங்களை கடந்து சென்றது


என் மீதிருந்த என்னவளின் பார்வை இப்பொழுது அந்த pulsar பாவியின் மேல்


அவள் :"ஏங்க வண்டிய மாத்தலாம்ல, அங்க பாருங்க pulsar என்னா வேகத்துல போது..... உங்க வண்டியும் இருக்கே..."

(pulsar பாவிக்கு என் சாபத்தை கொடுத்து)

நான் : "வண்டிய மாத்றதோ, இல்ல இதலயே ஸ்பீடா போறதோ ஒரு பெரிய விஷயமே இல்ல டியர்..... இப்படி மெதுவா போன நம்ம பயண நேரம் அதிகரிக்கும் அவ்ளோ நேரம் உன் கூட நான் டைம் ஸ்பென்ட் பண்லாமேன்னு தான்.... இப்டிபோறேன்" (அவ்வ்வ்வவ்வ்வ்வவ்வ்வ்)

அவள் : (என் கன்னத்தை கில்லி)..... யூ ஆர் சோ க்யூட் ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥



Saturday, March 8, 2014

மகளிர் தின வாழ்துக்கள்




கொசுக்களிலும் கடிப்பது பெண் கொசுவே என்று


ஆணி புடுங்கும் ஆணியவா(வியா)திகளுக்கு


பெண் கொசு கடிப்பதற்கு காரணம் அது தன் உடலில் உள்ள


முட்டைகள் ஊட்டம் பெறவே மனிதரின் இரத்தத்தைக் குடிக்கிறது


தான் இறந்தாலும் பரவாயில்லை தன் குழந்தையை வாழவைக்க


வேண்டும் என்று கொசு இனத்தில் கூட நினைப்பது  "பெண்" தான்


மகளிர் தின வாழ்துக்கள்


Saturday, March 1, 2014

கிறுக்கல்ஸ் – பாகம் 2


போ 



download



என்றும் என்னை விட்டு பிரியமாட்டேன் என்ற நீ


உன் அன்னையின் கண்ணை பார்த்ததும்


போடா வெண்ணை என்று மண்ணை கவ்வ வைத்தாயே



பார்வையற்றோர் காதல் 





காதலுக்கு கண் இல்லை என்பார்கள் – இங்கு


காதலர்களுக்கு கண் இல்லை


காண்கிறார்கள் காதலின் துணையால்  – பார்வையற்றோர் காதல் 



நட்பா ??? காதலா ???





நட்பு காதலாக மாறாது – நீ


நட்பை மட்டும் காதலித்திருந்தால் 



நாட்டியம்





என் நம்பிக்கையும் சிதறியது


அவள் நாவின் நாட்டியத்தில்



பிள்ளை பேரு 





காமம் என்னும் சங்குஜத்தில் தொடங்கி


தாய்மை என்னும் தெய்வீகத்தில் முடிவது – பிள்ளை பேரு



கால்மெறி





என் கண்ணீர் துடைக்க வந்த கைக்குட்டை என்று நினைத்தேன்


அவள் கால் துடைக்கும் கால்மெறி ஆக்கிவிட்டால்



எப்போ ???





வெள்ளிதோறும் விரதம் இருந்தேன்


உன் வெள்ளி மயிரினை கையில் கொள்ள


வெள்ளந்தியாய் நீ இருக்க வெரசப் பொண்ணா நானிருக்க


வெல்லம் கொண்டு வந்து என் உள்ளம் கொண்டுப் போவதெப்போ?


உன் எண்ணம் கலந்துப்போன பின்னே என் கன்னம் கிள்ள போவதெப்போ?


ஸ்ரீ

Monday, February 24, 2014

கிறுக்கல்ஸ் - பாகம் 1


குழந்தையின் சிரிப்பில் இறைவன்






        நான் நாத்திகன் என்பதையும் மறந்தேன்


அந்த மழலையின் சிரிப்பில்......



 



கருமி




அழகான உலகை படைத்த - கடவுள்

பிறக்கும் போதே சிலரின் கண்ணை அடைத்த - கடவுள்

ஈரேழுலகில் தோன்றிய இனி தோன்றும் கருமிகளில் கருமி - கடவுள் 

சமம்




கலை இல்லாத சிலையும்

அலை இல்லாத கடலும்

இலை இல்லாத கிளையும்  

கிளை இல்லாத மரமும்

திளை இல்லாத வேலையும்

வலை இல்லாத மீனவனும்

மிளை இல்லாத நாடும்

அளை இல்லாத மலையும்

உளை இல்லாத சிங்கமும்

நிலை இல்லாத வாழ்கைக்கு சமம்

நட்பு





காதலில் தோல்வியை ஏற்றுகொள்ளும் உலகம்


நட்பில் தோல்வியை ஏற்க மறுக்கிறது



புரட்சி




புரட்சி இன்றி பரவுகிறது


“பர்தா” கலாச்சாரம் தமிழ்நாட்டு வண்டி ஓட்டும் பெண்களால் 


ஸ்ரீ

Monday, February 17, 2014

கொசு

சற்று நீண்ட இடைவேளைக்குப் பின் இன்னொரு கதை மூலம் உங்களை சந்திக்கிறேன். இந்த சிறுகதை ஒரு புதிய பாண்டஸி (FANTASY) முயற்சி படித்துவிட்டு கருத்தைக் கூறவும்.


 START WITH ZERO EXPECTATION.


முதல் கதையை படிக்க இங்கு கிளிக்கவும்… CLICK HERE FOR FIRST STORY….

இரண்டாவது கதையை படிக்க இங்கு கிளிக்கவும்.CLICK HERE FOR SECOND STORY

மூன்றாவது கதையை படிக்க இங்கு கிளிக்கவும்.CLICK HERE FOR THIRD STORY

கொசு


 

டீக்கடையில்.......................                          


“அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் வரும் மார்ச் 1ம் தேதி முதல் மின்னணு கொசு மட்டை வழங்கப்படும்..... கட்டுகடங்கா உற்பத்தி ஆகியிருக்கும் கொசுக்களை கட்டுபடுத்த தமிழக அரசு அதிரடி நடவடிக்கை” என்று தினசரியின் தலைப்பை டீக்கடை பெஞ்சில் அமர்ந்து வாசித்தார் சோமு.


“ஆமா இது கொடுத்துட்டா போதுமா அடுத்த பக்கத பாருங்க “டெங்கு,மலேரியா,சிக்குன்குனியாவால் தமிழகத்தில் பலி ஆனவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டியதம்” இதல இந்த மட்டைய வச்சிக்கிட்டு என்னப் பன்றது அது கொஞ்ச நாளையல ரிப்பேர் ஆகிடும் அதுக்கப்பறம்  என்ன பன்றது” என  சிலாகித்து கொண்டான் குப்பன்.


“ஏங்க இது ஒரு தற்காப்பு நடவடிக்கைதான்..... மட்டைய கொடுக்கறவங்க ரிப்பேர் ஆனா அத சரி செய்ய வழியையும் சொல்லுவாங்க எனக்கென்னமோ இந்த திட்டத்தால கொசு பிரச்சனை குறையும்னு ஒரு நம்பிக்கை இருக்குது....” என்று சொல்லும் பொழுதே அவர் கன்னத்தின் ரத்தத்தை உரிந்து கொண்டிருந்த இரண்டு கொசுக்கலை “சப்” என்று அடிக்க கை முழுதும் இரத்தம் .


 


சென்னை சத்யா நகரில் உள்ள ஒரு வீட்டில் ........................


“கொசு மருந்த விக்கறானுங்களா இல்ல வெறும் தண்ணிய கலந்து விக்கறாங்கள தெரில கொசு மருந்த போட்ட ஒரு கொசு சட்டப் பண்ண மாட்டேங்குது....... மாசம் இது ஒரு தண்ட செலவு” என்றப்படியே ஜன்னல்களை சாற்றினார் வாசன்.


“ஆறு மணி ஆனாலே எதோ போருக்கு போற மாதிரியே இருக்கு ஒவ்வொரு நாளும்........எவ்ளோ தான் கதவ, ஜன்னல மூடினாலும் எப்படியாவது கொசுக்கள் வந்துடுதுங்க....” என்று வெறுத்துக்கொண்டால் ராணி


“ஏண்டி பின் கதவ மூடினியா? என்று உரக்க ஒலித்தது வாசனின் குரல்.


இது தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் ஆறு மணிக்கு நடைப்பெறும் நிகழ்ச்சியாகிவிட்டது. கடந்த ஒரு வருடமாக தமிழகத்தில் கொசுக்களின் எண்ணிக்கை கட்டுபடுத்த முடியாத அளவுக்கு அதிகரித்து விட்டது. அரசும் மக்களும் பல மருந்துகள் பல கோடிகள் பல வழிகளை உபயோகப் படுத்தினாலும் கொசுக்களை அசைக்க முடியவில்லை. மலேரியா, டெங்கு, சிக்குன்குனியா, யானைக்கால் என கொசுக்களால் வரும் நோயினால் மட்டும் சுமார் 1 லட்சம் பேர் இறந்து விட்டார்கள். கொசுக்கள் அரசுக்கு மிகப் பெரிய சவாலாக ஆகிவிட்டது.


கொசுக்களை கட்டுபடுத்த அரசு, விஞ்ஞானி ராவ் தலைமையில் ஒரு குழு அமைத்தது இந்த குழு மூலம் அரசு பல நடவடிக்கைகள் எடுத்தாலும் நிலைமை சீரடையவில்லை. கடைசியாக இந்த குழு பரிந்துரைத்தது தான் மின்னணு கொசு மட்டை அதன் படி அரசும் பல்லாயிர கோடிகளை செலவழித்து ஒரு மாதத்தில் அனைவருக்கும் இலவசமாக மின்னணு கொசு மட்டை வழங்க ஏற்பாடு செய்தது..


மார்ச் 1 ம் தேதி முதல் அனைவருக்கும் மின்னணு கொசு மட்டை வழங்கப்பட்டது அன்று முதல் தமிழகத்தில் தீபாவளி தான் மக்கள் ஆர்வமாக கொசுக்களை அடித்து கொண்டிருந்தனர் எந்த திசை திரும்பினாலும் “டப் ... டப்” என்று சத்தம். கொசு மட்டையில் அடிக்கும் ஷாக்கில் கொசுக்கள் கருகிப் போயின.


கூவம் நதியும் கடலும் ஒன்று சேரும் இடம், இரவு 12 மணி


சிறிதும் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு சிறு சிறு மலைகள் போல ஒன்றன் மீது ஒன்றாக பல லட்சக்கணக்கான கொசுக்கள் அமர்திருந்தன. மக்கள் பயன்படுத்தும் கொசு மட்டைப் பற்றி ஒவ்வொரு கொசுவும் பேசிக் கொண்டிருந்தன. சில கொசுக்கள், “அதை கண்டுபிடித்தவன் குடும்பம் விளங்காமல் போக” என சாபமெல்லாம் விட்டுக்கொண்டிருந்தன


“தலைவர் ரங்குஸ்கி வரார் அமைதியாய் இருங்கள்” எனக் கூட்டத்தில்  ஒரு குரல் ஒலித்தது. அத்தனை லட்சக் கொசுக்களின் நடுவில் கொசுக் கூட்டங்களின் தலைவர் ரங்குஸ்கி வந்து நிற்க அனைத்துக் கொசுக்களும் ஆரவாரம் செய்தது.


“அமைதி, அமைதி” என தன் உரையை தொடங்கியது ரங்குஸ்கி.


“நாம் இங்கு எதற்கு கூடியிருக்கிறோம் என்று அனைவர்க்கும் தெரியும் பல கோடிகளாய் இருந்த நம் எண்ணிகையை மனித அரக்கர்கள் கடந்த இரண்டு நாட்களாக குறைக்க தொடங்கியிருக்கிறார்கள். இப்படியே விட்டு விட்டால் நம் இனத்தை அடியோடு அழித்து விடுவார்கள் விரைவில்  அவர்களுக்கு சரியான பாடம் புகட்டியாகவேண்டும், நம்  இனத்தை காக்கவேண்டும். இப்போது ஏரியா பொறுப்பாளர்கள் தங்கள் கருத்துகளைக் கூறலாம்.”


வியாசர்பாடி ஏரியா பொறுப்பாளர் மங்குஸ்கி, “நீங்கள் கூறுவது நூற்றுக்கு நூறு உண்மை நம் எதிரிகளுக்கு சரியான பாடம் புகட்டியாக வேண்டும். உங்கள் ஆணைக்காக காத்திருக்கிறோம்”


மற்ற ஏரியா பொறுப்பாளர்களும், உறுப்பினர் கொசுக்களும் “ஆம்.... ஆம்“ என ஆரவாரம் செய்ய ஆரம்பித்துவிட்டன.


மீண்டும் “அமைதி.... அமைதி” என கூட்டத்தை சமாதான படுத்தியது ரங்குஸ்கி.


“தலைவர் சொல்வது மிகவும் சரி நம் எதிரிகளுக்கு நாம் யாரென்று காட்ட வேண்டும்... ஆனால் அரசு இலவசமாக கொடுத்துள்ள மின்னணுக்  கொசு மட்டையை நம் வீரர்களால் சமாளிக்க முடியவில்லை அதில் அடிக்கும் ஷாக்கில் கருகி விடுகிறார்கள் நானே இருமுறை தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஓடினேன்..... இதை எப்படி சமாளிப்பது?” என சைதாப்பேட்டை சங்குஸ்கி கேட்டது.


அதற்கு தலைவர் ரங்குஸ்கி “முடியும் நிச்சயமாக முடியும்.... 1980-ல் நம் முன்னோர் கொசு மருந்துகளுக்கும், கொசுவத்தி சுருளுகும் எதிராக செய்த ஜீன் (gene) மாற்றப் போர் ஞாபகம் இருக்கிறதல்லவா. ஜீன் மாற்றம் செய்தப் பின் கொசுவத்தி சுருள், மருந்துகள் நம்மை ஒன்றும் செய்ய முடியவில்லை அதுப்போல ஜீன்(gene) மாற்றம் தற்போது செய்யவேண்டும்”.


காசிமேடு கன்னாஸ்கி “எப்படி செய்ய வேண்டும் என்று ஆணையிடுங்கள் தலைவரே அதை வெற்றியோடு செய்து காட்டுகிறோம்” என சூளுரைத்தது.


“சொல்கிறேன்....... இன்றிலிருந்து சித்ரா பௌர்ணமி வரை நம் இனத்தவர் யாரும் மனித உயிர்களை கடிக்க கூடாது, அவர்களின் ரத்தத்தை அருந்தக்கூடாது அப்படி விரதம் இருந்து சித்ரா பௌர்ணமி அன்று நம் அனைவரின் உமிழ் நீரையும் எடுத்து ஒன்றாக கலந்து நம் முன்னோர் சொல்லி கொடுத்த மந்திரத்தை ஓதினால் நம் உடம்பில் ஜீன் மாற்றம் ஏற்படும். அந்த ஜீன் மாற்றம் நம் உடம்பில் இன்சுலேஷன் (insulation) சக்தியை உருவாக்கும் அந்த சக்தியினால் எவ்வளவு உயர் அழுத்த ஷாக் அடித்தாலும் நம்மை ஒன்றும் செய்ய இயலாது. அதன் பின் நாம் மனித இனத்தை பழிவாங்கி விடலாம்” என்றது.


உடனே அனைத்துக் கொசுக்களும் குதுகளித்தன.


“நம் நாட்டு இனத்தவர் மட்டும் இதில் பயனடயாமல் உலகத்தில் உள்ள அனைத்து கொசுக்களும் இதில் பங்கு கொள்ள வேண்டும் உடனே அனைத்து நாடுகளுக்கும் செய்தி அனுப்புங்கள்” என்று ஆணையிட்டது ரங்குஸ்கி.


மறுநாள் முதல் ஒரு கொசுக் கூட மக்களை கடிக்க வில்லை மக்கள் அனைவரும் மகிழ்ச்சியில் திளைத்தனர். உலகில் உள்ள கொசுக்கள் அனைத்தையும் அழித்துவிட்டோம் என ஊரே விழாக்கோலம் பூண்டிருந்தது.


இரண்டாம் நாள் இரவு சுகாதாரத் துறை அமைச்சர், விஞ்ஞானி ராவ்க்கு போன் செய்து “கன்க்ராட்ஸ் ராவ், வெற்றி....... கொசு இனமே அழிந்து விட்டது நாம் கொடுத்த கொசு மட்டைக்கு பயந்து கடந்த இரண்டு நாட்களில் ஒரு கொசுக் கூட மனிதரை கடிக்க வரவில்லை நாம் ஜெயித்து விட்டோம்” என மகிழ்ச்சியாக கூற....... விஞ்ஞானி ராவுக்கு முகம் மாறியது “சரி நான் உங்களிடம் பிறகு பேசுகிறேன் முக்கிய வேலை இருக்கிறது” என்று அமைச்சரிடம் கூறிவிட்டு தன் புத்தக அலமாரிக்கு ஓடினார் அங்கே ரிச்சர்ட் பெர்னார்ட் எழுதிய “கொசுக்களின் புரட்சி” (THE REVOLUTION OF MOSQUITO) என்ற நூலை எடுத்து வேகமாகப் புரட்டினார். அதில் 1980-ல் நடைபெற்ற ஜீன் மாற்றம் பற்றி முழுவதும் படித்து அதிர்ந்தார்.


“ஒ மை காட் (OH MY GOD)  என்று தலையில் கை வைத்து கீழமர்ந்தார்.


அமைச்சரிடம் எல்லா விடயத்தையும் கூறி முப்படை தளபதிகளின் கூட்டத்தை உடனே கூட்டுமாறு வேண்டினார். அதற்கு அமைச்சர் “கொசுக்களுக்கு முப்படைகளா? இது என்ன விளையாட்டா?” எனக் சிரித்துக் கொண்டே கேட்க அதற்கு ராவ் “ஜீன் மாற்றம் மட்டும் நடந்தால் டைனாசர்ரசால் உலகம் பட்ட அவஸ்தையை விட பல மடங்கு ஆபத்தை உலகம் சந்திக்கும்” என எச்சரித்தார். உடனே அமைச்சர் கூட்டத்துக்கு அனுமதி வழங்கினார்.


முப்படை தளபதி இடையே கொசுக்களின் ஜீன் மாற்றத்தையும் அதன் ஆபத்துகளையும் விளக்கி கூற அனைவரும் உன்னிப்பாக கவனித்தனர் “இது மனித இனத்திற்கு கிடைத்திற்கும் ஓர் அறிய வாய்ப்பு உலகில் உள்ள அனைத்து கொசுக்களும் ஓரிடத்தில் கூடுகின்றன அனைத்தையும் அழிக்க இதுவே சரியான தருனம்,  நாம் தாக்குதல் நடத்தும்போது ஒரு கொசு தப்பித்தாலும் அது ஆபத்து எனவே ஒரே தாக்குதல் அனைத்தும் இறக்க வேண்டும்” என்றார்.


கப்பல் தளபதி, “கடல் மூலம் தாக்குதல் நடத்தலாம் தண்ணீர் வழியே ராக்கெட் குண்டை செலுத்தி தாக்குதல் நடத்துவதே சிறந்ததாக இருக்கும்” என்றார் அனைவரும் அதற்கு சம்மதம் தெரிவித்தனர்.


இறுதியில் அமைச்சர் “இந்த விடயம் மக்களுக்கு தெரியாதவண்ணம் நடைபெற வேண்டும் என்று முதலமைச்சர் விரும்புகிறார்” என தெரிவிக்க. அனைவரும் அதற்கும்  சம்மதம் தெரிவித்தனர்.


சித்ரா பௌர்ணமி இரவு 12 மணி அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருந்தது. அழகிய சந்திரன் வானில் வாய் பிளந்து வீற்றிருக்க, தாக்குதல் நடத்தும் கப்பல் கடலில் ஒரு கிலோமீட்டருக்கு அப்பால் நிறுத்தி வைக்கப்பட்டது. கடலும் கூவ நதியும் சேருமிடத்தை சாட்டிலைட் மூலம் கண்காணித்து வந்தனர் நேரம் செல்ல செல்ல பெரிய பெரிய மலைகள் போல் கொசுக்களின் கூட்டம் பெருகி கொண்டே இருந்தது அனைத்து கொசுக்களும் உமிழ் நீரை கக்க ஆரமித்துக் கொண்டிருந்தன இவை அனைத்தையும் கண்காணிப்பு அறையிலிருந்து ராவ், தளபதிகள், அமைச்சர் ஆகியோர் பார்வையிட்டு வந்தனர். சிறிது நேரத்தில் கொசுக்கள் வரவு நின்றது.


விஞ்ஞானி ராவ் தலையசைக்க, கப்பல் படை தளபதி “பையர் (FIRE) என்று ஆணையிட்டார் அடுத்த நொடியில் “சர்... சர்... சர்... சர்...” என்று நான்கு குண்டுகள் பாய்ந்தன அந்த இடமே புகை மூட்டமானது கொசுக்கள் அனைத்தும் சின்னாபின்னமானது ஒரு கொசுக்களாலும் தப்பிக்க இயலவில்லை. கண்காணிப்பு அறையில் அனைவரும் கட்டி தழுவி ஆர்பரித்தனர்.


மறுநாள் காலையில் செய்திதாள்களும் ஊடகங்களும் கொசுகளுக்கேதிரானப் போர் பற்றிய செய்திகளை மக்களுக்கு அறிவித்தது மக்கள் அனைவரும் மகிழ்ச்சியில் ஆனந்த கூத்தாடினர். விஞ்ஞானி ராவுக்கு முதலமைச்சர், பிரதமர், பாராட்டுக்கள் குவிந்துக் கொண்டிருந்தது.


ஓரிரவு கொசுக்களால் தூக்கம் கெட்டு நடுராத்திரியில் எழுந்து உட்கார்ந்துக் கொண்டு உலகில் உள்ள கொசுக்கள் அனைத்தையும் அழித்தால் எப்படி இருக்கும் என எண்ணி எழுதியக் கதை.


ஸ்ரீ



PLEASE COMMENT DOWN….

FORGIVE TYPO ERRORS

CLICK FOLLOW TO GET UPDATES ABOUT MY PAGE

Tuesday, January 21, 2014

காயத்திரியின் கல்யாணம்

என்னுடைய மூன்றாவது சிறுகதையில் சந்திப்பதில் மகிழ்ச்சி. படித்து விட்டு உங்கள் கருத்துக்களை கூறவும்.



முதல் கதையை படிக்க இங்கு கிளிக்கவும்… CLICK HERE FOR FIRST STORY….


இரண்டாவது கதையை படிக்க இங்கு கிளிக்கவும்.CLICK HERE FOR SECOND STORY



காயத்திரியின் கல்யாணம்



Aக வேண்டும். எந்த ஒருக் குறையும் இல்லாமல் திருமணம் ஏன் தடை படுகிறது? என்றால் அதற்கான விடை இறைவன் ஒருவனிடத்தே தானே இருக்கிறது.


“இன்னும் அரை மணி நேரத்தில் வந்துடுவாங்க... சீக்கிரம்...” என்ற படியே சமையலறை சென்றாள் கற்பகம்.


திருமணமாகவில்லையே என்ற கவலை மனதில் இருந்தாலும் அதை துளியும் வெளியில் காட்டிக்கொள்ள மாட்டாள் காயத்திரி. “தன்னை விட்டால் இப்படியே சுதந்திரமாய் இருந்துவிடுவேன் திருமணம் ஒருப் பெண்ணை அடிமை ஆக்கிவிடும்” போன்ற பெண்ணியச் சிந்தனைச் செடிகள் மனதில் இருந்தாலும் தாய் தந்தையின் ஏக்கங்களுக்காக அவற்றிற்கு நீரூற்றாமல் இது நாள் வரை இருந்து வருகிறாள் காயத்திரி.


பத்து நிமிடங்கள் கழித்துக் காசிநாதனின் கைபேசி அலறியது. ஆர்வத்துடன் எடுத்த காசிநாதன் பேசப் பேச முகம் சுருங்கியது “சரிங்க...” என்று வைத்த நொடியில் யார் என்றால் கற்பகம்.


“ப்ரோக்கர் பரமசிவன்....”


“என்னவாம்...? கிளம்பிட்டாங்கலாமா...? எங்க வராங்கலாம்...? என்று கேள்விகளை அடுக்கினால் கற்பகம்.


“வர வழில கார் பஞ்சர் ஆய்டுச்சாம்... இன்னும் ரெண்டு மணி நேரம் ஆகுமாம்...” என்றார் சுருதிக் குறைவாக. “கடவுளே உனக்கு என்ன குறை வச்சோம்... இப்படி எங்க மகளை சோதிக்கரையே... “ என்று புலம்ப ஆரமித்து விட்டால் கற்பகம்.


“என்னப்பா இதுவும் புஸ்ஸ்ஸா...” என்று கிண்டலாக கேட்டாள் காயத்திரி.


“இல்லமா... இன்னும் இரண்டு மணி நேரத்துல வந்துட்ராங்கலாம்” என்று தன் மகளுக்கு ஆறுதல் கூறுவதுப் போல் தன்னையே தேற்றிக்கொண்டார் காசிநாதன்.


“அடப் போங்கப்பா நீங்க வேணும்னாப்  பாருங்க பொண்ணோட ராசி சரியில்ல இந்த இடம் வேண்டாமென்று சொல்லிட்டாங்க மாப்பிள்ளை வீட்டுகாரங்கன்னு ப்ரோக்கர் அடுத்து போன் பண்ணுவார் பாருங்க” என்றால் காயத்திரி.


இது கிண்டலுக்காக அல்ல, விரக்தியின் வெளிப்பாடு என்றுத் தெரியாதவர் அல்ல காசிநாதன். அதனால் ஏதும் பேசாமல் சென்றுவிட்டார்.


இன்னும் இரண்டு மணி நேரம் இருக்கிறதே என்று தன் டைரியை எடுத்தால் காயத்திரி. ஆம், காயத்திரிக்கு உற்ற தோழன் என்றால் அந்த டைரிதான். காயத்திரியுடைய சிரிப்பு, கோபம், அழுகை, வெட்கம், வீரம் என அனைத்தும் அறிந்து வைத்திருந்தது அந்த டைரி அவளின் எழுத்தினால். எந்த ஒரு நிகழ்வானாலும் அதை அந்த டைரியில் ஏற்றிவிடுவாள்  எழுத்துக்களாய். அதனால்தான் என்னவோ திருமணத் தடங்கலுக்கானத் தடையம் சிறிதும் அவள் முகத்தில் இருப்பதில்லை.


டைரியை திறந்த உடன் பதினேழாம் மாப்பிள்ளை பக்கம் வந்தது......


“ஏம்மா... உனக்கு சாமி கும்முடனும்னா நீ மட்டும் வர வேண்டியது தானே எதுக்கு என்னை இந்த கூட்டத்துல கூட்டி வந்து அல்லோலகப் படுத்துற???” என்று சாமியை தரிசித்து விட்டு கடிந்துக் கொண்டால் காயத்திரி.


“எல்லாம் உனக்காக தாண்டி... எந்த வரணும் உனக்கு பொருந்த மாட்டுது... நாளைக்கு வரப் போற மாப்பிள்ளையாவது  உனக்கு முடியனும்... அதுக்கு தான் உன்ன கூட்டிட்டு வந்தேன்... சும்மா சிலுத்துகர...” என்றால் கற்பகம்


“ஆமா... முடிஞ்சிட்டாலும்” என்றால் வெறுப்பாக. ஒவ்வொரு முறையும் துணிக் கடை பொம்மைப் போல் சீவி சிங்காரித்து அவையில் நின்றுப் போலியான வெட்கத்தை வெட்கத்துடன் வெளிக்காட்டி..... மதிக்காமல் வேண்டாம் என்று சொல்லிவிட்டு செல்லும் மாப்பிள்ளைகள் மேல் வெறுப்பு வரத்தானேச் செய்யும்.


வீட்டுக்கு கிளம்பலாம் என்று எழும்போது காயத்திரியுடன் கல்லூரியில் படித்தத் தோழி மீனா... காயத்திரியை தற்செயலாக பார்த்தால்


ஹே...!!! காயு.... வாட் எ ப்லசன்ட் சர்ப்ரைஸ்....(what a pleasant surprise) எப்டி இருக்க... எவ்ளோ நாள் ஆச்சு பாத்து....” என்று மீனாக் கூறக் களிப்பில் “நல்லா இருக்கேண்டி... எப்போ அமெரிக்காலேர்ந்து வந்த” என்றால் ஆர்வமாக “ஒரு வாரம் ஆகுதுடி அம்மா அப்பாவப் பாக்க இந்தியா வந்தேன்...” என்றால் இவர்கள் பேசிக் கொண்டிருக்கையில் மீனாவை ஒரு நான்கு வயதுச் சிறுவன் ஐந்து முறைக்குமேல் உரிமையாகச் சுற்றினான். அதைப் பார்த்த காயத்திரி “யார்டி உன் பையனா?” என்று அவனின் கன்னத்தில் முத்தமிட்டால். முத்தமிட்ட எச்சிலை துடைத்து கேள்வி குறியுடன் காயத்திரியைப் பார்த்தான் அந்தச் சிறுவன். “ஆமாண்டி... என் பிள்ளைத் தான்.... உன் குழந்தைங்க எங்கடி.... ? விளையாட்ராங்களா???” என்றப்படியே இருமுறை எட்டிப் பார்த்தால் மீனா.


“அடியே... ஐ யாம் எ ப்ரீ பேர்ட் ( I Am A Free Bird )....இன்னும் எனக்கு கல்யாணம் ஆகல” என்று நகைத்தாள் காயத்திரி.


“எங்கம்மா.... எவ்ளோ பேரு வந்து பாக்குறாங்க ஒரு வரன் கூட அமைய மாட்டேங்குது” என்று புலம்பலை ஆரம்பித்தால் கற்பகம். சற்று சுதாரித்துக் கொண்டு “கவலைப் படாதீங்க ஆண்ட்டி (aunty) சீக்கிரம் செட் ஆய்டும்.... அவர் தேடுவாரு உன் கல்யாண இன்விடேஷனோட மீட் பண்லாம்.... ஆல் தி பெஸ்ட்” என்று நகர்ந்தால் மீனா.


“உன் வயசு பொண்ணுங்க குடியும் குடுத்தணுமா இருக்குங்க... உன்ன மட்டும் ஆண்டவன் இப்படி சோதிக்கிறானோ....” என்று கற்பகம் ஆரம்பிக்க “அம்மா போதும் ஆல்ரெடி சாமி கிட்ட புலம்பியாச்சு...” என்றால் காயத்திரி.


“உனக்கு எங்கேர்ந்து தெரியப்போது என்னோட கஷ்டம்.... நாளைக்கு வரப்போற மாப்பிளையாவது அமையனும்.... என்ன குறை இருந்தாலும் ஒத்துக்க...” என்றால் கற்பகம்.


“ஆமா இவ்ளோ நாள் குறை சொல்லி நான் தான் தட்டி கழிச்சேன் பாரு.....” என்று இருவரும் வீட்டுக்கு நடையைக் கட்டினர்.


வழக்கமானப் பரபரப்புடன் பதினேழாவது மாப்பிள்ளையும் வந்தார் காயத்திரியைப் பார்க்க. ”பொண்ண அழைச்சிகிட்டு வாங்க” என்று கணீர் குரல் ஒலிக்க கற்பகம் காயத்திரியை அழைத்து வந்தால்.


“வணக்கம் சொல்லுமா” என்று கற்பகம் கூற அவையில் அனைவரையும் வணங்கினால் காயத்திரி.


சற்று நிலவுக்கே சவால் விடும் ஒளிவீசும் முகத்தை நிமிர்த்தி மாப்பிள்ளையை பார்த்த காயத்திரிக்கு அதிர்ச்சி. பதினேழாவது மாப்பிள்ளைக்கு படிய வார முடி இல்லை வழுக்கைத் தலை. அப்போது தான் “என்ன குறை இருந்தாலும் ஒத்துக்க” என்று அம்மா சொன்ன வார்த்தைகள் ரிபீட் மோடில் ( REPEAT MODE ) ஒலிக்கும் பாடல் போல திரும்பத் திரும்ப ஒலித்தன.


சர்வ லட்சணம் பொருந்தியப் பெண்கள் அவலட்சனமிகுந்த ஆண்களை எப்படி திருமணம் செய்திருப்பார்கள் என்றப் பல நாள் கேள்விக்கான விடை அப்போது தான் அவளுக்கு தெரிந்தது.


சிறிது நேரம் கழித்து அந்த அவலட்சணம் மற்றொரு அவலட்சனத்தின்க் காதை கடித்தது. உடனே “சரி நாங்க கிளம்பறோம்.... போய்விட்டு போன் செய்றோம்” என்றது மீண்டும் அந்த கணீர் குரல்.


அவர்கள் சென்று மூன்றாவது மணி நேரத்தில் கைப்பேசியில் ப்ரோக்கர் பரமசிவன் “அய்யா... பாப்பா ஒல்லியா இருக்குதுன்னு மாப்பிள்ளை வீட்ல நினைக்கிறாங்க அதனால  நம்ம வேற இடம் பாத்துக்கலாம் அய்யா” என்றுப் போனை கட் செய்தார்.


“என்னதான் பண்றது.... எப்படி தான் இவளக் கரை ஏத்தப் போறமோ...” என்று தலையில் கை வைத்து அமர்ந்தார்க் காசிநாதன்.


“ஏங்க நம்ம ஜோசியர் குருசாமி கிட்ட போயிட்டு இவளுக்கு எப்ப தான் கல்யாணம் நடக்கும்ன்னு கேட்டு வரலாமா...?” என்றால் கற்பகம்.


“சரி வா...” என்று காயத்திரியின் ஜாதகத்தை எடுத்துக்கொண்டு ஜோசியர் வீட்டுக்கு சென்றனர் இருவரும்.


கிரகக் கணக்கு, மனக் கணக்கு, விரல் கணக்கு என்றுப் போட்டு “அருமையான ஜாதகம்” என்று ஜாதகத்தை கீழே வைத்தார் ஜோசியர் குருசாமி.


அதைக் கேட்டு பூரிப்படைந்தனர் இருவரும் “எங்க சாமி கல்யாணம் தள்ளி போய்ட்டே இருக்கு எதாவது தோஷம் கீஷம் இருக்கானுப் பாருங்களேன்” என்றால் கற்பகம்.


“தோஷமா...? நீங்க ஒன்னு.... ஆத்துலப் போற தண்ணி மாதிரி தெளிவா இருக்கு ஒரு பிரச்சனையும் இல்ல” என்றார் ஜோசியர் குருசாமி.


“பின்ன... ஏன்தான் திருமணம் தள்ளி போய்ட்டே இருக்கு?” என்று காசிநாதன் கேட்க “எல்லாத்துக்கும் ஒரு நேரமன்னு வரணும்ல... தை மாசம் குருபலன் வருது... தைப் பொறந்தா வழிப் பிறக்கும் போங்க” என்று ஜோசியர் குருசாமிக் கூறி அவர்களை தேற்றினார்.


வீட்டுக்கு வந்து ஜோசியர் குருசாமி கூறியதை காயத்திரியிடம்க் கூறினால் கற்பகம் “அடப் போமா நீங்களும் உங்க ஜாதகமும்” என்றப் படியே தன் டைரியை எடுத்து எழுதத்  தொடங்கினால் காயத்திரி.


            வாழ்க்கை என்னும் கடலை


            ஒரேக் கப்பலை வைத்துக் கடக்க முடியாது


            அதுவும் பெண்களால் முடியவே முடியாது


            பெற்றோர் என்னும் கப்பல் என் பாரம் தாங்காமல்


            என்னை மற்றொரு கப்பலில் ஏற்றப் பார்கிறார்கள்


            அது ஓட்டைக் கப்பல் என்று தெரிந்தும் கூட


            கப்பலேத் தேவையில்லை நீந்தியே


            கரையை கடப்பேன் நான்.... விடுவார்களா???


            பெண்ணிற்க்கான சாபக்கேடுத்தானே இது...


            பதினாரு முறைப் படை எடுத்து


            இந்தியப் பெண்ணை ( நாட்டை ) கவர்ந்தானம் கஜினி முகமது


            பதினேழு முறை மாப்பிள்ளைகள் படை எடுத்தும்


            இந்தப் பெண்ணை கவர முடியவில்லை – இதிலிருந்து


            என் அருமை புரியும், நான் யாரென்று தெரியும்  


                                                                 ---- காயத்திரி


என்று படித்து முடித்தால். “பதினெட்டாம் மாப்பிள்ளை” ன்னு தலைப்பு போட்டுடனும் போலயே  காயு.... என்று மனதிற்குள்ளேயே கூறிக் கொண்டால்.


கார் சத்தம் கேட்டது “அவுங்க வந்துட்டாங்க...” என்றுக் கூறிக் கொண்டே மாப்பிள்ளை வீட்டாரை வரவேற்க்க வாசல் வரைச் சென்றார் காசிநாதன்.


பதினெட்டாம் மாப்பிள்ளையும் அவரது வீட்டாரும் வந்து வீட்டினுள் அமர்ந்தனர் ”பொண்ண அழைச்சிகிட்டு வாங்க” என்று ப்ரோக்கர் பரமசிவனின் கணீர் குரல் ஒலிக்கக்  கற்பகம் காயத்திரியை அழைத்து வந்தால் “வணக்கம் சொல்லுமா” என்று கற்பகம் கூற அவையில் அனைவரையும் வணங்கினால் காயத்திரி.


“இவரு..... தான்மா.... மாப்பிள்ளை பேரு மணிகண்டன்...” என்று பரமசிவன் அறிமுகம் செய்ய தலை நிமிர்ந்து மணிகண்டனைப் பார்த்தால் காயத்திரி. இத்தனை நாள் காத்திருப்புக்கு பலன் கிடைத்தார்ப் போல் அழகிய உருவம், திரண்ட கன்னம், அடர்த்தியான முடி, என சர்வலட்சனமும் பொருந்த இருந்தான் மணிகண்டன்.


“அண்ணனும் நோக்கினால் அவளும் நோக்கினால்” என்றப் படி இருவரும் பார்க்க பலக் கோடி யூனிட் மின்சாரம் இருவர் கண்களுக்கும் இடையே கடத்தியே இல்லாமல் கடந்துச் சென்றது.


“என்னப்பா பொண்ணப் புடிச்சிருக்கா?” என பரமசிவன் கேட்க “புடிச்சிருக்கு” என்று பொட்டில் அடித்தார்ப் போல பதில் வந்தது மணிகண்டனிடமிருந்து.


   பதினெட்டாம் படி ஏறி மணிகண்டனை தரிசித்து விட்டால் போலும் நம் காயத்திரி.


தைப் பிறந்ததும் வழிப் பிறக்கும் என ஜோசியர் குருசாமி சொன்னதுப்  பலித்துவிட்டது.


அப்புறம் என்னங்க.... இன்னும்... எல்லாரும் காயத்திரி மணிகண்டன் கல்யாணத்துக்கு வந்து ஆசிர்வாதம் பண்ணிடுங்க பத்திரிக்கை வைக்க உங்க வீட்டுக்கு விரைவில் வருவோம்


இங்ஙனம் உங்கள் வரவை எதிர்நோக்கும் காயத்திரியின் தம்பி


ஸ்ரீ 


PAINTING CREDITS: ILAYARAJA


PLEASE COMMENT DOWN….


FORGIVE TYPO ERRORS


CLICK FOLLOW TO GET UPDATES ABOUT MY PAGE

Friday, January 10, 2014

அப்பா... மகன்...

என் முதல் சிருகதையை படித்து விமர்சனம் கூறியதற்கு மிகுந்த நன்றிகள். இரண்டாவது சிருகதையுடன் உங்களை சந்திப்பதற்கு மிகுந்த மகிழ்ச்சி. இதை படிக்கத் தொடங்கும் முன்பு முதல் கதையின் அனுபவத்தை அடியோடு மறந்திடுங்கள்.

BOTH ARE DIFFERENT GENRE SO MAKE YOUR EXPECTATION TO ZERO GRADE AND PROCEED.



முதல் கதையை படிக்க இங்கு கிளிக்கவும்.... CLICK HERE FOR FIRST STORY….




அப்பா… மகன்…


72ace-images6987


“இந்த மிடில் கிளாஸ் வாழ்க்கைய ஏன்தான் படைத்தானோ ஆண்டவன்  தினம் செத்து பிழைக்கவேண்டியதா இருக்குது” என்று புலம்பி கொண்டே அலுவலகத்திற்கு புறப்பட்டு கொண்டிருந்தார் ராஜன்.


அடர்ந்த மீசை, குள்ளமான தோற்றம், எப்போதும் “ஏன் தான் இந்த வாழ்க்கையோ ?” என்ற கேள்வியோடு முகம் என்று அடையாளம் சொன்னால் புதிய மனிதர் கூட எளிதாக கண்டுபிடித்து விடுவார்கள் நம் ராஜனை. தமிழாள் தானே நீங்க......என்று கேட்கும் அளவுக்கும் பாரம்பரியத்தைச் சுமக்கும் மனைவி லட்சுமி, பல வருடங்களுக்கு முன்னரே தோளுக்கு மேல் வளர்ந்த (ராஜன் குள்ளமானவர் என்பதை மனதில் கொள்ளவும்) பொறியியல் இறுதி ஆண்டு படிக்கும் மகன் கோகுல். அரசின் அறிவுரை படி “நாம் இருவர், நமக்கு ஒருவர்” என்பதை பின்பற்றி வாழ்ந்தாலும் அரசு கொடுக்கும் சம்பளத்தில் மட்டும் வாழமுடியவில்லை. அரசு அலுவலகத்தில் குமாஸ்தாவாக இருந்த இத்தனை வருடத்தில் மகனின் படிப்பை தவிர சொல்லிக் கொள்ளும் அளவுக்கு வளர்ச்சி இல்லை.


அப்படி என்னதான் அப்பாவுக்கும் மகனுக்கும் பொருத்தமோ... எப்பொழுதுமே பிரச்சனை என்ற வருத்தம் ராஜனின் மனைவி மனதை வாட்டி எடுத்துக்கொண்டு இருக்கிறது. ஆம், ராஜனும் கோகுலும் எலியும் பூனையும் போல.... இருவருக்கும் ஏழாம் பொருத்தம். எப்போதும் தன் மகனை காரணமின்றியே கரித்துக்கொட்டி கொண்டே இருப்பார் ராஜன். சரி அவர் தான் அப்படி அவர் குணத்தை அறிந்து அனுசரித்து செல்லாமல் அவர் மகன் கோகுலும் ஏட்டிக்கு போட்டியாக நடப்பான். இவர்கள் பிரச்சனைகளில் மத்தியஸ்தர்களாக வருபவர்கூட யார் சரி யார் தவறு என்று கூற முடியாத அளவு உப்புச் சப்பு இல்லாத சண்டைகளாக இருக்கும்.


“என் வாழக்கை சிறைப் பட்ட நாளை குறிக்க இருந்தது இந்த ஒரு வாட்ச் மட்டும் தான்.... நாலு வருஷமா இது கூட மக்கார் பண்ண  ஆரமுச்சிடுச்சு” என்று தன் கல்யாண நாள் அன்று பரிசாக வந்த கைகடிகாரத்தை வெறித்தனமாக தட்டி கொண்டிருந்தார் ராஜன். நான்கைந்து முறை தட்டினால் தான் ஓடும் அதுவும் 8 மணிநேரம் தான்.


“அத தூக்கிப் போட்டுட்டு வேற வாங்கலாம் ல” என்றார் லட்சுமி


“வர வருமானத்துல எங்கேர்ந்து..... இத என்னிக்கு தான் திருத்த போறனோ, இதே போல திருந்தாதது நிறைய வீட்ல இருக்கு” என்று அந்த சமயத்தையும் தன் மகனை குத்தி காட்ட பயன் படுத்தி கொண்டார் ராஜன். சாப்பிடுவதற்காகக் உட்கார்ந்த கோகுல் சாப்பிடாமல் தந்தை தன்னை மறைமுகமாக திட்டியதைக் கேட்டு எதுவும் பேசாமல் கல்லூரி பையை எடுத்துக் கிளம்பினான்.


உடனே... “காலேஜ்லேர்ந்து வரும் போது வீரண்ணன் கிட்ட சீட்டு துட்டு எவ்ளோன்னு கேட்டுவரச்சொல்லு” என்று தன் மகனுக்கு உரைப்பதைப் போல் தன் மனைவிக்குச் சொன்னார்.


அங்கிருந்து “அதெல்லாம் என்னால செய்ய முடியாது நான் ஒன்னும் இந்த வீட்டு வேலக்காரன் இல்ல” என்று கோகுலின் குரல் ஒலித்தது.


“வர...வர... கழுதைக்கு திமிரு ஏறிடுச்சு ஒரு நாள் வெச்சுக்கிறேன்” என்று பையை எடுத்து கொண்டு வேகமாக கிளம்பினர் ராஜன்.


பொழுது விடிஞ்சு பொழுது சாஞ்சா இந்த சண்டைகளுக்கு நடுவே உழன்றுழன்று எந்த விட சலனமும் இன்றி வேலையை தொடர்ந்தார் கோகுலின் அம்மா.


மறுநாளும் அதே காட்சி... பல நாளுக்கு முன்பே காலாவதி ஆனா தன் கைக் கடிகாரத்தை தட்டி கொடுத்திருந்தார் ராஜன். கல்லூரிக்கு கிளம்பும் நேரத்தில் அடுப்படியில் இருக்கும் அம்மாவிடம் சென்று


“ம்மா  300ரூபா காலேஜ்க்கு வேணும் ம்மா” என்றான் கோகுல்.


“என்னது! 300ரூபாவா எதுக்கு அவ்ளோ காசு இரண்டுவாரத்துக்கு முன்னாடி தானே ஆயிர ரூபா வாங்கனே, போனவாரம் 400ரூபா  வாங்கன... என்ன விளையாட்ரியா” என்று கோகுலின் வருமானத்தைத் இலவசமாகத் தணிக்கை செய்து கொண்டிருந்தாள் அவன் அம்மா.


“நா.. என்ன ம்மா... பன்றது காலேஜ்ல கேக்றாங்க” என்றான்.


“சரி ப்போ... இப்ப இல்ல வார கடைசியில வாங்கிக்கோ”.


இத்தனையையும்... கேட்டும் கேக்காததுப் போல் தன் தட்டும் வேலையை தொடர்ந்தார் ராஜன்.


கோகுல் வீட்டை விட்டு கிளம்பியா உடன் “எதுக்காம் 400 ரூபா ???” என்றார் மனைவியிடம்.


“எதோ காலேஜ்க்கு தரணுமாம் எதுக்குன்னு தெரில” என்றார் லட்சுமி.


“இங்க என்ன பணம் மரத்தலியா காய்க்குது..., ஊரு கெட்டுப் போயிருக்கு.... இது என்னத்த பன்ன பொய் சொல்லி காசு வாங்குதோ” என்று சிறிது கூட தயக்கமே இல்லாமல் பேசினார் ராஜன்.


“என் புள்ள தப்பு செய்யாது தேவ இல்லாம பேசாதீங்க” என்று புள்ளைக்கு வக்காளத்து வாங்கினால் இலட்சுமி.


“ஆமா உன் புள்ளைய நீ தான் மெச்சிக்கணும், நீ வேனும்னா பாரு” என்று கிடைத்த வாய்ப்பை வழக்கம் போல் மகனை வசைப்பாடப் பயன் படுத்திக் கொண்டார்.


அன்று சனிக்கிழமை... காலை வழக்கம் போல் தட்டும் வேலை...


கோகுல் அம்மாவிடம் சென்று “ம்மா... காசு” பருப்பு டப்பாவில் சுற்றி வைத்திருந்த 400 ரூபாவை எடுத்து தந்தாள் இலட்சுமி. மகிழ்ச்சியில் சந்தோசமாக கல்லூரிக்கு கிளம்பினான்.


அப்போது ராஜன் “இதெல்லாம் எங்கேர்ந்து உருப்டப்போது” என்றார். அடுத்த நிமிடத்தில் “அம்மா... ரொம்ப உருப்ட்டது இங்க இருக்கு பாரும்மா” என்று சொல்லி ஓடி விட்டான் கோகுல். வேறெதுவும் பேச முடியாமல் கோபத்தை கைக்கடிகாரத்தில் காட்டினர் ராஜன்.


அன்று இரவு 10 மணி ஆகியும் கோகுல் வீடு திரும்ப வில்லை. வழக்கமாக 6 மணிக்கெல்லாம் வீட்டுக்கு வந்து விடும் மகன் பத்து மணி ஆகியும் வரவில்லையே என்று பதற்றத்துடன் வாசலில் இருந்தால் லட்சுமி.


மனத்திற்குள் ஒரு பயம் இருந்தாலும் “எங்க குடிச்சிட்டு கும்மாளம் போடுதோ, நீ தானே காசு கொடுத்து அனுப்புன இப்ப அழு” என்று ஆரம்பித்து விட்டார் ராஜன்.


சரியாக 10.15க்கு வீட்டிற்கு வந்தான் கோகுல் “எங்கடப் போன ???” என்றார் இலட்சுமி “இல்லமா ப்ராஜெக்ட்க் காக ப்ரௌஸ் பண்ண வேண்டியது இருந்தது அதான் ப்ரெண்டு வீட்ல இருந்தேன்” என்றான். அவன் பேசிக் கொண்டிற்கும் பொழுது கோகுலின் ஆருகில் சென்று இரண்டு மூன்று தடவை மோப்பம் பிடித்தார் ராஜன்.


சரி முகம் கழுவிக்கிட்டு வந்து சாப்டு” என்றால் லட்சுமி. கோகுல் சட்டையை கழட்டி ஆணியில் மாட்டி விட்டு முகம் கழுவ சென்றான்.


இலட்சுமி ராஜனிடம் “ஏன் அவன அப்டி மோப்பம் புடிச்சீங்க” என்றால் அதற்கு “அவன் குடிச்சிட்டு வந்திர்கானன்னு செக் பண்ணேன்” “நீங்க திருந்தவே மாட்டீங்க” என்று சமையலறை சென்றார் லட்சுமி.


ராஜன் விறுவிறென்று கோகுலின் சட்டைப் பாக்கெட்டை துழாவிப் பார்த்தார் எதுவும் சிக்கவில்லை. இதை முகம் கழுவிவிட்டு வரும்போது கோகுல் பார்த்து விட்டான் ஆனால் ஏதும் பேசாமல் சென்று சாப்பிட்டான். பிறகு அனைவரும் படுக்க சென்றனர்.


கோகுலின் மனது மட்டும் தன் தந்தையின் நடவடிக்கையால் மிகவும் ரணமாக இருந்தது. “என்னத் தான் கெட்டுப் போக வாய்ப்புக் கிடைத்தாளும் சபலப் படாதவன்” என்று தன் நண்பர் வட்டத்தில் பாராட்டுக்கள் பெற்றிருப்பவன் கோகுல் இந்நிலையில் நடந்த நிகழ்ச்சிகள்  அவனை வாட்டி எடுத்தன “நா... என்னதான் அவருக்கு பன்னேன் எப்பயுமே என்ன எதிரியாவே பார்க்கறாரு” என்று மனதிற்குள்ளேயே புலம்பி, விழியோரம் நீர் வடியத் தூங்கினான்.


மறுநாள் வழக்கத்தை விட சற்று மங்களகரமாக இருந்தார் லட்சுமி “என்னடி இன்னிக்கு பளிச்சுன்னு இருக்க என்ன விசேஷம்” என்றார் ராஜன்.


“ம்..ம்..ம்..ம்... உங்க கடிகாரத்துக்கு வயசு 25  ஆச்சு” என்றால் குத்தலாக.


சற்று சுதாரித்துக் கொண்டு “ஒ... இன்னிக்கு நம்ம கல்யாண நாளா... சிறைப் பட்டு 25வருஷமாச்சா” என்றார் கிண்டலாக “நீங்களா ? நானா ?” என்று பதிலே கேள்வியாக வர பதில் ஏதும் கூற முடியாமல் கைகடிகாரத்தைப் பார்த்து (மனத்திற்குள் மனைவியை பார்த்து) “இத என்னிக்கு தான் மாத்தா போறேனோ” என்று சொல்லும் பொழுது ஒரு டப்பாவை ராஜன் முன் நீட்டினான் கோகுல்.


“என்னதிது ???” என்றார் ராஜன்


“தொறந்து பாருங்க” என்றான் கோகுல்.


அதை வாங்கி திறந்து உள்ளே இருக்கும் பொருளை எடுத்தார் ராஜன். கண்ணை பறிக்கும் தகத் தக என்று மின்னும் கோல்ட் பிளேட்டிங் கொண்ட டைட்டன் கைக்கடிகாரம் மதிப்பு சுமார் 3500 ரூபாய் இருக்கும்.


“காலேஜ் சேர்ந்ததுலேர்ந்து, தரக் காசுல சேத்துவச்சு வாங்கினதுத் தான்.... கொடுத்த காச சிகரெட் குடிச்சிட்டு, தண்ணி அடிச்சிட்டு கும்மாளம் போடல..... கைக்கடிகாரத்தத் திருத்தனும்னுச் சொன்னீங்க... திருத்திட்டேன்... வீட்ல இருக்குறச் சிலதத் திருத்தனும்னு சொன்னீங்க அதெல்லாம் எப்பயுமே கரெக்ட்டா தான் இருக்கு” என்று சொல்லி நன்பனை பார்க்க வெளியில் கிளம்பினான்.


எதிர்த்து பேச வாயில்லாமல்..... கையில் கைக்கடிகாரத்துடன் “திருந்த வேண்டியது நீ தான்” என்று சொல்லாமல் சொல்லி விட்டு போறான் என்பதை புரிந்து கண்களில் ஓரம் கண்ணீருடன் ராஜன்..............


“நீராக வடிந்தது அவர் கண்ணீர் மட்டும் அல்ல இத்தனை நாளாய் தன் மகனை எதிரியாகப் பார்த்த அவர் கண்ணோட்டமும் இருவருக்கும் இடையில் இருந்த பனிமலையும் தான்”


இந்த கதையை படித்துவிட்டு தந்தை மீதே எல்லா தவறும்..... என்ற கண்ணோட்டத்துக்கு வந்து விடாதீர்கள். கண்டிப்பாக இருந்தால் தான் மகன் ஒழுக்கத்தோடு வளர்வான் என்ற ஒரு நல்ல எண்ணத்தினால் கூட ராஜன் அப்படி நடந்திருக்கலாம்.


தந்தை மகன் என்ற உறவு சற்று வித்தியாசமான உறவு. இந்த உறவில் உணர்வு என்பது குறைவு தான் இந்த உறவை எதன்கூடவும் ஒப்பிடமுடியாது எப்போதுமே இந்த உறவில் ஒரு பெரிய இடைவேளி (GAP or BARRIER)  இருக்கத்தான் செய்கிறது. ஒரு மகன் உலகத்தை பார்க்கும் விதத்தை முதல் குருவான தன் தந்தையிடம் தான் கற்றுகொள்கிறான் அதற்குரிய  மரியாதையை தந்தைக்கும், உலகம் இன்னதென்று அறிந்த பிறகு அவன் செய்வது சரியானதாக தான் இருக்கும் என்ற நம்பிக்கையை தந்தை  மகனுக்கும் தரவேண்டும். இந்த மரியாதையும், நம்பிக்கையும் இருந்தால் தந்தை மகன் உறவு இனிமையாகவும் வலிமையாகவும் அமையும்.


ராஜனுக்கு முற்றிலும் எதிர்மறையான குணத்தைக் கொண்ட தந்தைக்கு மகனாக


ஸ்ரீ


PLEASE COMMENT DOWN....


FORGIVE TYPO ERRORS


FOLLOW MY PAGE

Wednesday, January 8, 2014

MODERN DAY GIRLS & MODERN DAY KAATHAL

MODERN DAY GIRLS & MODERN DAY KAATHAL


ஒர் ஆடவன் தன் காதல் அனுபவத்தை விவரித்தான்

முதலில் பார்த்தால்
பின் சிரித்தால்
சமிங்க்ஜைச் செய்தால்
அருகில் அமர்ந்தால்
செய்தோம் காதல்
பின் ஒரு நாள் தந்தாள் அவள் திருமண நோட்டீஸ்
அன்று அவள் கொடுத்தது திருமண நோட்டீஸ் அல்ல
என் வாழ்க்கைக்கு அவள் தந்த நோட்டீஸ்

கா”தல்” #MODERN DAY பெண்கள் ஆண்களுக்கு தரும் க”ல்தா”
#MODERN DAY GIRLS & #MODERN DAY KAATHAL
 
******************************************************************************************************************
ஒரு ஆண் வருத்தமாக அமர்ந்திருந்தான்
 
என்ன என்றேன்... காதல் தோல்வி என்றான்...என்ன ஆயிற்று என்றேன்... அதற்குஅவள் நான் நினைத்தது போல இல்லை

ரொம்ப மோசம் எனக்கு நேர் எதிர்மார் என்றான்

நான் அட மடையா நீ வைத்தது

உன் காதல் மேல் நம்பிக்கை இல்லை உன் காதலி மேல்

"காதலை நம்பு காதலியை அல்ல"

த்ரிஷா இல்லனா திவ்யா அதுவும் இல்லனா தீபிகா

"நமக்கு ஆயிரம் பொண்ணுங்க மடியும் மச்சி "

#MODERN DAY GIRLS & #MODERN DAY KAATHAL

ஸ்ரீ

Tuesday, December 31, 2013

அப்போ அத்தனையும்... ?

அப்போ அத்தனையும்... ?


“போகாத ஹன்ஷிகா...கா...கா”....... என்றே...தூக்கத்தில் மொபைளை எடுத்து நேரம் பார்த்தேன்...........

ஏழே முக்கா வா...??? அம்மா பேயோட்ட ஆரமித்து விடுவாலே என்று அவசர அவசரமாய் போர்வையை எடுத்து சுருட்டி வைத்தேன்.

தெளிவா போனா அம்மா வாயில் விழ வேண்டும் என்று உடம்பு வலி போல் பாவ்ல காட்டி கொண்டு அறையினில் இருந்து வெளியே வந்தேன் என்ன ஒரு ஆச்சரியம் யாரும் இல்லை தப்பித்தோமடா சாமி என்று குளியலறை சென்று பல் துளக்கி,முகத்தை கழுவி கொண்டு வெளியே வந்தேன். துண்டில் முகத்தை துடைத்து கொண்டே என்ன என் ஆளுங்களே காணோம் அதான் அப்பா அம்மா தங்கை என்று மனதில் நினைத்துக்கொண்டே ஹாலுக்கு வந்தேன் வீட்டில் உள்ள பொருள் எல்லாம் களைந்திருந்தது. சரி மேலே சென்று பார்க்கலாம் என்று இரும்பு கேட் அருகே சென்றேன் அது உள் வழியாக பூட்டப் பட்டிருந்தது. பூட்டப் பட்டிருந்த கதவைப்  பார்த்ததுமே மனத்திற்குள் ஒரு பயம் உருவானது. சரி அம்மா உடைய செல்லுக்குக் கால் பண்ணிப் பார்க்கலாம் என்று என் கைபேசியை எடுக்க என் அறைக்கு சென்றேன். அப்பொழுது, வீட்டின் லேன்ட் லைன் ஒலித்தது அம்மாவத்தான் இருக்கும் என்று எடுக்க சென்றேன் போன் கட் ஆகி விட்டது. நான் அம்மாக்கு டயல் செய்தேன் பிஸி டோன்........, இரண்டம் முறை பிசி டோன்........., மூன்றாம் முறை பிஸி டோன்........ஒருவேளை அம்மாவே எனக்கு ட்ரை செய்கிறார்களோ என்று போனை கீழே வைத்து காத்திருந்தேன். மணி அடித்தது இரண்டாம் மணியிலேயே எடுத்தேன் நல்ல வேலை அம்மா தான்.

“எங்க மா இருக்கீங்க யாருமே காணோம் எங்கே  போனீங்க வீட்ல இருக்க பொருல்லாம் களஞ்சிருக்கு”

அதற்கு அம்மா “எதையும் பேசாத உன்னோட காலேஜ் பேக்ல ரெண்டு நாளுக்குத் தேவையானத் துணிய எடுத்து வெச்சுக்கிட்டு பழைய விமான நிலையத்துக்கு ஆட்டோ புடிச்சி வா சீக்கிரம்...”

“டிரஸ் எடுத்துக்கிட்டு எதுக்கு அங்க வரணும் மொதல எங்க இருக்கீங்க...”

“எதுவும் கேக்காதனு சொன்னேன்ல வா-ன்னா...வா...”

அதற்கடுத்து “டொய்ங்.. டொய்ங்... டொய்ங்” கால் கட் செய்ய பட்டது.

ச்சே... என்றே என் டிரெஸ்ஸை எடுத்து பையினுள் வைத்தேன், கட்டில் மேல் இருந்த என் புது ஈயர்போன்(earphone)  “என்ன விட்டு போறியே” என்று பாவமா பாத்தது... எடுத்து வைத்துக்கொண்டேன் மனத்திற்குள் “எதற்கு போறேனே தெர்ல இது கொறச்சலா..?” என்று ஒரு கேள்வி நம்ம என்னிக்கு மனசாட்சிய மதிச்சிருக்கோம் வழக்கம்போல் மிதித்து விட்டு நடையை  கட்டினேன்.

ஆட்டோவில் ஏறி பழைய விமான நிலையம் என்றேன் ஐம்பது நிமிட பயணத்துக்கு பிறகு ஒரு இடத்தில் இறக்கி

“அதோ...தெரிது பார் அதான்” என்று விரர்ர்ர்ர்... என்று பறந்தார் ஆட்டோகாரர்.

உண்மையிலேயே பழைய விமான நிலையம்தான் பாழடைந்த கட்டிடம் அதிலும் பாதி இரு மாடி  கட்டி முடிக்க வில்லை... சரி என்று உள்ளே நுழைந்தேன் சிறிது தூரம் நடந்து சென்றதும் அதிர்ச்சி.......... ஒரு ஐம்பது வயது நிறைந்த  ஆண் தரையில் பதறி கொண்டு அருகில் சென்றேன் உடம்பு முழுதும் இரத்தம் நான் வந்ததை அறிந்த அவர் முடியாமல் கையை மட்டும் தூக்கி கட்டிடத்தின் ஒரு திசையை காட்டி அசைத்தார். இரண்டு அசைவு தான் பின் தலைத் தரையில்.. ஆம்.. இறந்து விட்டார். என்ன நடக்கிறது என்று புரியாமல் பயத்தில் தரையில் அமர்ந்தேன் இரண்டு நிமிடங்களுக்கு பிறகு சுதாரித்துக் கொண்டு அவர் என்ன சொல்ல வந்தார் என்று புரியாமல் குழப்பத்துடன்... ஒரு வேளை என் குடும்பத்துக்கு எதாவது??? “ஐயோ” என்று அவர் காட்டிய திசையை நோக்கி வேகமாக ஓடினேன்...

அது முதல் மாடிக்கு சென்றது இன்னும் முன்னேறி சென்றேன், அது அந்த கட்டிடத்தின் பின்புறத்துக்கு என்னை இட்டுச்சென்றது பின்புறம் ஒரு ஏரி போல் தோற்றம் தந்தது,

ஆம்..... நான் எதிர் பார்த்தது போல் அங்கே யாரோ இருக்கிறார்கள். அருகில் சென்றேன் ஒரு கட்டுமஸ்தான ஆண் நின்றிருந்தான். அவன் அருகில்  சென்று பேச முற்பட்டப்பொழுது அவன் கை ஒரு திசையை நோக்கி காட்டியது. அங்கே பார்த்தப் பொழுது ஏரியின் நடுவே ஒரு மணல் திட்டு போல் இருந்தது அங்கே என் அம்மா, அப்பா, தங்கை................ அப்போழுது மனதில் பல கேள்விகளின் நடுவே மகிழ்ச்சி பொங்கியது. அந்த நொடியில் என் கைபேசி அலறியது... அம்மாதான்....

“சீக்கிரம் இங்கே வா” என்று சொல்லி கட் செய்தார்கள்.

அப்பொழுது உடனே ஒரு ஹெலிக்கொப்டர் அந்த மணல் திட்டு மேல் இறங்கியது மூன்று பெரும் அதில் ஏறினர்.

குழப்பம் மேல் குழப்பம்... கேள்வி மேல் கேள்வி...

உடனே கூட இருந்த அந்த நபர் “நீச்சல் தெரியுமா?” என்று முரட்டு தனத்துடன் கேட்டார்.

“தெரியாது” என்றேன். நான் அடுத்த கேள்வியை கேக்கும் முன் ஒரு மஞ்சள் வண்ண நீச்சல் பயிலும் வளையத்தை மாட்டி..... தண்ணியில் தள்ளி விட்டான்....கவுந்தடித்து விழுந்தேன் தண்ணீரில்.....

போர்வை,மெத்தை எல்லாம் தண்ணீர்.... முகத்தில் இருந்த தண்ணீரை துடைத்து கண் திறந்து பார்த்தாள் மஞ்சள் நிற பக்கெட் உடன் அம்மா திட்டி கொண்டே சென்றுக்கொண்டிருக்கிறாள். மொபைலை எடுத்து மணி பார்த்தேன் மணி ஏழே முக்கா........அப்போ அத்தனையும்.... ???

டொய்ங்... டொய்ங்... டொய்ங்... டொய்ங்... டொய்ங்... டொய்ங்... டொய்ங்...

கனவுடன்

ஸ்ரீ

 

 forgive my typo errors...........

fav

Popular Posts

Pages

my fav

Powered by Blogger.

Find Us On Facebook

Conncet With Us